சென்னை, டிச. 4– கடந்த சில மாதங்களாக புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 45 மருதாணி, சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், மஹாலக்ஷ்மி, பாவம் கணேசன் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நேத்ரன் நடித்துள்ளார். விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என்று பல சேனல்களில் 20 ஆண்டுகளாக நடித்து வருகிறார். […]