செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் புரெவி புயல் சேதங்களை ஆய்வு செய்த மத்திய குழுவினர்

கடலூர், டிச. 30– கடலூர் மாவட்டத்தில் புரெவி புயல் சேதங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடலூர் மாவட்டத்தில் புரெவி புயலால் விவசாய பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 8–ந் தேதி நேரில் பார்வையிட்டு, மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தவும், சேத விவரங்களை கணக்கெடுக்கவும் உத்தரவிட்டார். மேலும் புரெவி புயல் சேதங்களை பார்வையிட, மத்திய உள்துறை அமைச்சகம் இணை செயலாளர் அஷுதோஷ் அக்னிஹோட்ரி தலைமையிலான குழு வருகை புரிந்துள்ளனர். […]

செய்திகள்

புரெவி புயல் பாதிப்பை பார்வையிட 28–ந்தேதி மத்திய குழு தமிழகம் வருகை

புரெவி புயல் பாதிப்பை பார்வையிட 28–ந்தேதி மத்திய குழு தமிழகம் வருகை பாதிக்கப்பட்ட எந்த விவசாயியும் விடுபடக்கூடாது என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு சென்னை, டிச.25–- ‘புரெவி’ புயல் பாதிப்புகளை பார்வையிட 28-ந்தேதி மத்திய குழு வருகை தர இருக்கிறது. சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் விரைவாக நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த நவம்பர் மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் நிவர் புயலால் […]

செய்திகள்

எதை நிறைவேற்ற முடியுமோ அதனைத் தான் சொல்லுவோம்; நிறைவேற்றுவோம்

நாகை, டிச.10– எதை நிறைவேற்ற முடியுமோ அதனைத் தான் சொல்லுவோம்; நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட பின் நிருபர்களுக்கு முதலமைச்சர் பேட்டி அளித்தார். கேள்வி: சாதிவாரிக் கணக்கெடுப்பு தேர்தல் யுக்தியாகத்தான் தமிழ்நாடு அரசு செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்கின்றாரே? பதில்: அவர் எப்போதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய திட்டங்களெல்லாம் அப்படித்தான். நாகப்பட்டினத்தில் கலைஞர் அனல் மின்சார நிலையம் கொண்டு வருவதாகச் சொன்னார். […]

செய்திகள்

முழுமையாக பயிர் பாதிப்பு கணக்கீட்டுக்கு உத்தரவு: எடப்பாடி பழனிசாமி பேட்டி

எந்த பகுதியும் விடுபடாமல் முழுமையாக பயிர் பாதிப்பு கணக்கீட்டுக்கு உத்தரவு: எடப்பாடி பழனிசாமி பேட்டி பொங்கலுக்கு மக்களுக்கு கரும்பு வழங்க நடவடிக்கை நாகை, டிச.10– பொங்கலுக்கு மக்களுக்கு கரும்பு வழங்க அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். எந்த பகுதியும் விடுபடாமல் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் கணக்கீட்டு அறிக்கை, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புரெவி புயல் மற்றும் கனமழையால் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் […]

செய்திகள்

பயிர் சேத அறிக்கை வந்ததும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புரெவி புயல் சேதத்தை கணக்கிட மீண்டும் மத்திய குழு வர வலியுறுத்தி உள்ளோம் பயிர் சேத அறிக்கை வந்ததும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு மத்திய அரசு 2–ம் தவணை தொகை தந்துவிட்டது; நிதி கொடுக்கவில்லை என்பது தவறு கடலூர், டிச.9– பயிர் சேத அறிக்கை விவரம் வந்ததும் உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புரெவி புயல் மற்றும் கனமழையால் கடலூர் […]

செய்திகள்

வேட்டியை மடித்து கட்டி வயலில் இறங்கினார் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளிடம் பயிர் சேதம் பற்றி கேட்டார் வேட்டியை மடித்து கட்டி வயலில் இறங்கினார் எடப்பாடி பழனிசாமி சேதம் அடைந்த சாலையில் நடந்து சென்று பார்வையிட்டார் * பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் * தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டார் கடலூர், டிச.9– கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ள சேதப் பகுதிகளை பார்வையிட சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வயலில் இறங்கி விவசாயிகளிடம் சேதம் விவரம் பற்றி கேட்டார். ‘புரெவி’ […]

செய்திகள்

கடலூர், விழுப்புரம், வேலூரில் மத்திய குழுவினர் ஆய்வு

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், வேலூரில் மத்திய குழுவினர் ஆய்வு அரசுக்கு பரிந்துரை செய்து உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதி சென்னை, டிச.8– நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், வேலூரில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். வங்கக் கடலில் கடந்த 23-ம் தேதி உருவான நிவர் புயல் கடலூர் அருகில் கரையைக் கடந்தது. தொடர்ந்து, சமீபத்தில் உருவான புரெவி புயல் தமிழகத்தில் கரையை கடக்காமல் வலுவிழந்த போதும் பரவலாக கனமழை பெய்துள்ளது. […]

செய்திகள்

நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர் நாகப்பட்டினம், டிச. 8– நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர். நாகப்பட்டினம் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கைத்தறி […]

செய்திகள்

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை

வளிமண்டலச் சுழற்சி அதே இடத்தில் நீடிப்பு விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை சென்னை, டிச.7– புரெவி புயல் மன்னார் வளைகுடாவுக்கு வந்த நிலையில், அது படிப்படியாக வலுகுறைந்து தற்போது வளிமண்டலச் சுழற்சியாக அதே இடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மன்னார் வளைகுடா கடல் பகுதியில் […]

செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கர் பயிர் தண்ணீரில் மூழ்கியது

முகாம்களில் உள்ள மக்களுக்கு 3 வேளையும் உணவு கடலூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கர் பயிர் தண்ணீரில் மூழ்கியது கடலூர், டிச.6– கடலூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 70 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பலவீனமடைந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக 20 முதல் 35 செ மீட்டருக்கும் மேலாக கனமழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் தொடர் […]