செய்திகள்

மகாராஷ்டிராவில் பரவும் நரம்பியல் நோய் பாதிப்பு: புனேவில் ஒருவர் உயிரிழப்பு

தீவிர சிகிச்சை பிரிவில் 101 பேர் அனுமதி மும்பை, ஜன. 27– மகாராஷ்டிராவில் ‘கில்லியன் பார் சிண்ட்ரோம்’ என்ற நரம்பியல் நோய் பாதிப்பு பரவி வருகிறது. இதுவரை 101 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புனேவில் ஒருவர் உயிரிழிந்திருப்பதாக முதற்கட்ட மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில், ‘கில்லியன் பார் சிண்ட்ரோம்’ என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் […]

Loading

செய்திகள்

நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி மோதியது; 2 குழந்தை உட்பட 3 பேர் பலி

புனே, டிச. 23– மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். புனே நகரின் வகோலி சௌக் பகுதியில், நடைபாதையில் 12 பேர் தூங்கி கொண்டு இருந்தனர். அந்த வழியாக, வந்த லாரி, நிலைதடுமாறி அவர்கள் மீது ஏறியது. இதில் 2 குழந்தை உட்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, […]

Loading

செய்திகள்

புனேவி்ல் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது ஏறிய லாரி; 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

புனே, டிச. 23– புனேவில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. புனேவின் கேஷ்னந்த் பாதா பகுதியில் ஒரு நடைபாதையில் 12 தொழிலாளர்கள் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அதிகாலையில் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று நடைபாதையில் ஏறியுள்ளது. […]

Loading

செய்திகள்

புனேயில் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் உள்பட 3 பேர் பலி

புனே, அக்.2– மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் இன்று காலை வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் 2 விமானிகள் மற்றும் பொறியாளர் ஒருவர் என மூவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து புனே மாவட்டத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த பவுதான் புத்ருக் என்ற பகுதியில் காலை 6.45 மணியளவில் நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விழுந்தவுடன் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவல் உள்ளூர் போலீசாருக்கு கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்துள்ளனர். […]

Loading