செய்திகள்

வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை

டெல்லி, ஏப். 27– வாக்கு எண்ணிக்கையின்போது போதும், தேர்தல் முடிவுக்கு பின்னரும் வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வெற்றியை கொண்டாட தடை இந்த நிலையில் கொரோனா பரவல் […]

செய்திகள்

கர்நாடகம், கேரளா, ஒடிசா, புதுச்சேரியில் 55 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

சென்னை, ஏப். 24– கர்நாடகம், கேரளா, ஒடிசா, புதுச்சேரி மாநிலத்தில் வார இறுதி நாட்களில் 55 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை கர்நாடகம், கேரளா, ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் அறிவித்தன. அந்த வகையில் […]

செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டால் உணவகங்களில் 10 சதவீதம் தள்ளுபடி

புதுவை, ஏப். 9– கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 10 சதவீத விலை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் முதல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியது. அதே சமயத்தில், கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதன்காரணமாக அம்மாநிலத்தில் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி, உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அம்மாநில துணைநிலை […]

செய்திகள்

புதுச்சேரியில் 11 மணிக்கு 20.07 சதவீத வாக்குப்பதிவு

புதுவை, ஏப். 6– புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 20.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,558 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக 1,558 வாக்குச் சாவடிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்தத் தோதலில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, கூடுதலாக 606 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 30 […]

செய்திகள்

ஏனாமில் மாயமான சுயேட்சை வேட்பாளர் காயங்களுடன் மீட்பு

ஏனாம், ஏப். 5– ஏனாமில் மாயமான சுயேட்சை வேட்பாளர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. ஆந்திரம் அருகேயுள்ள ஏனாம் பிராந்தியத்தில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். தற்போது, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இரு தொகுதியில் போட்டியிடுகிறார். அதில், ஏனாமும் ஒன்று. அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். மேலும், ஏனாமில் காங்கிரஸ் […]

செய்திகள்

புதுச்சேரியில் 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு!

புதுச்சேரி, ஏப். 3, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி அமைதி மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக 48 மணி நேரத்திற்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். புதுச்சேரி சட்டப்பேரவையின் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 6 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, நாளை இரவு 7 மணி முதல் வரும் 7-ம் தேதி காலை […]

செய்திகள்

கேரளம், தமிழ்நாட்டில் இன்று மோடி பிரச்சாரம்: எதிர்ப்பு காட்டியோர் கைது

சென்னை, மார்ச் 30– பிரதமர் நரேந்திர மோடி, கேரளா மற்றும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தபோது, கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தோர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்புக்கொடி–கைது இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி , கேரளாவில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். கேரளாவில் […]

Uncategorized

வேட்பாளர் கிடைக்காததால் ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியில்லை

புதுச்சேரி, மார்ச் 20– வேட்பாளர் கிடைக்காததால் ஏனாம் தொகுதியில் போட்டியிடும் முடிவை காங்கிரஸ் கட்சி கடைசிநேரத்தில் கைவிட்டுள்ளது காங்கிரஸ் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. கூட்டணி தொகுதி பங்கீட்டில் 15 தொகுதி பெற்றாலும், காங்கிரஸ் 14 தொகுதியில்தான் போட்டியிடுகிறது. புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 30 தொகுதியில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதி பிரித்துக் கொண்டன. இதில் காங்கிரஸ் போட்டியிடும் […]

செய்திகள்

புதுவையில் 5 தொகுதியில் தேமுதிக தனித்துப் போட்டி

சென்னை, மார்ச் 11– புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில், தேமுதிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிக, சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில், புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக, 5 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் […]

செய்திகள்

மது கடத்தலில் ஈடுபடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்: புதுவை போலீஸ் எச்சரிக்கை

புதுவை, மார்ச் 5– புதுச்சேரியில் இருந்து மது கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்குப் பரிந்துரை செய்யப்படும் என கலால்துறை ஆணையர் சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுவை, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6 ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபானம், சாராயம் கடத்தலைத் தடுக்க புதுவை கலால்துறையினர் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு […]