செய்திகள்

டெல்லியில் 101 வது நாளில் விவசாயிகளின் போராட்டம்

டெல்லி, மார்ச் 6– புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைமுறையை ஒழித்துக்கட்டுவதுடன், தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால் கையேந்தி நிற்கச்செய்து விடும் என கூறி, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். […]

செய்திகள்

40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் முற்றுகை; இந்தியா கேட் அருகே விவசாயம்

டெல்லி, பிப். 24– புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி, உத்தரப் பிரதேச எல்லைகளில் 3 மாதங்களாக போராடும் விவசாயிகள், சாலை மறியல், ரயில் மறியல் என அடுத்தடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த நிலையில், […]