செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? – பகுதி–15: இணையம்–3.0 பிளாக்செயினில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள்!

மா. செழியன் கடந்த 14 பகுதிகளில் புதிதாக உருவாகி வரும் இணையம்–3.0 என்ற பிளாக்செயின் தொழில்நுட்பத்திலான “நம்பிக்கை இணையம்” ஏற்படுத்தி வரும், புரட்சிகரமான மாற்றம் பற்றி ஓரளவு புரிந்துகொண்டுள்ளோம் என்று நம்புகிறேன். நிறைவாகவும், அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடனும் இந்த தொடரை நாம் நிறைவு செய்யும் முன்னர், இதனை தொகுத்து புரிந்து கொள்ள முயல்வோம்… தற்போதுள்ள இணையம் 2.0 பயன்பாடு கடந்த 20 ஆண்டுகளில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இதனை, கூகுள், பேஸ்புக் போன்ற உலகின் பெரு […]

Loading

செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி 14- பிளாக்செயினில் நம் பெயர்களை தனியுரிமையாக்கிக் கொள்ளுதல்!

மா. செழியன் அதேபோல, பெல்நெட் (BelNet) என்ற ஒன்றையும் பெல்டெக்ஸ் பிளாக்செயின் உருவாக்கி வருகிறது. பயனர்களுக்கு தங்கள் இணைய பயன்பாட்டை பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைத்திருக்க பெல்நெட் உதவுகிறது. இதன் காரணமாக, ஆன்லைன் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. பாரம்பரிய விபிஎன்களை விட வேகமானது என்பதுடன் செயல்திறன் வாய்ந்தது. மேலும் அரசுகள் போன்ற மூன்றாம் தரப்பினர் கூட, இணைய தரவு, இணைய செயல்பாடுகளை கண்காணிக்கவோ அல்லது தடுக்கவோ முடியாது என கூறப்படுகிறது. இதுவும் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே உள்ளது. […]

Loading

செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி–13 : நம்பிக்கை இணையத்தில் பிசாட், பிரவுசர், வாலட்!

மா. செழியன் பெல்டெக்ஸ் பிளாக்செயின் தனி மனிதர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வரும் புதுமை தொழில்நுட்பத்துக்கு பாதுகாப்பான மாற்றாக, பி-சாட், மற்றும் பெல்டெக்ஸ் வாலட், பிஎன்எஸ் போன்றவற்றை அறிமுகப்படுதுவது பற்றி குறிப்பிட்டு இருந்தோம் அல்லவா? அவை தற்போதே, கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அறிமுக நிலையில் (TRIAL VERSION) உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அறிமுக நிலை முடிந்து, முழு ஆற்றலோடு நடைமுறையிலுள்ள செயலிகள் போல் எளிமையாக பயன்படுத்தும் வகையில் சந்தைக்கு […]

Loading

செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி–12 தனியுரிமை எனும் பிரைவசி பிளாக்செயின், கிரிப்டோ கரன்சி!

மா. செழியன் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தனியுரிமை (PRIVACY) காயின் என்ற வகையில், பல்வேறு கிரிட்டோ கரன்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், தனி மனிதர்களின் தரவுகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான பிரைவேசி காயின்கள் மிகவும் முக்கியமானது என்றே சொல்லவேண்டும். தனியுரிமை கிரிட்டோ காயின்களில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘Monero’ முதலிடத்தில் உள்ளது என்று bitcoin.tax/blog/best-privacy-coins-in-2023 என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. அதேபோல், ZCASH, DASH போன்ற தனியுரிமை பிளாக்செயின் காயின்கள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளது. இதில், மோனேரோ காயின் பணப்பரிமாற்ற […]

Loading

செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி – 11; கிரிப்டோ கரன்சிகளின் வெவ்வேறு நோக்கங்கள்!

மா. செழியன் இணையம்–3.0 என்று அழைக்கப்படும் பிளாக்செயின் தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்பதை முன்பே பார்த்தோம். அதனால்தான் தமிழ்நாடு அரசு பிளாக்செயின் தொழில்நுட்பத்தை “நம்பிக்கை இணையம்” என்ற பெயரில், அதனுடைய வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியுள்ளது என்றும் சொன்னோம் அல்லவா? எனவே, நம்பிக்கை இணையம் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் விரிவாக்கம் அடையும்தானே! தற்போதுள்ள இணையத்தின் எந்தெந்த தளங்களில், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்படுகிறதோ, பாதிப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம், நம்பிக்கை இணையம் வளர்த்தெடுக்கப்படும்தானே? அப்படியாக பணத்தில் கள்ள நோட்டு சிக்கல் என்பதற்காக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி: 10; பங்குச்சந்தையும் கிரிப்டோ சந்தையும்!

பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? ஸ்டேக்கிங் குறித்து சென்ற பகுதியில் பார்த்தோம் அல்லவா? அதனை, பங்குச் சந்தையோடு ஒப்பிட்டு பார்த்தால் எளிதாக புரிந்துகொள்ளலாம்…உலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் பங்குச்சந்தையில் பொதுமக்கள் ஈடுபடுவது மிகவும் அதிகம். அதனால்தான், அவர்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளார்கள் என்று கூட சொல்லலாம். பெரு நிறுவனங்களின் லாபத்தை வளர்ச்சியை பொதுமக்களும் பங்கிட்டுக்கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அமெரிக்காவில் 55 விழுக்காடு மக்கள் பங்குச்சந்தையில் ஈடுபடுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் 33 சதவீதம் பேர் பங்குச்சந்தையில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

வாக்குப் பதிவு மேன்மைக்கு வலு சேர்க்கும் பிளாக் செயின் தொழில் புரட்சி

‘வை.மை’ வரும் நல்ல தலைமை – பாகம் 10 : ஆர்.முத்துக்குமார் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்திய வங்கித்துறை உலகிற்குமே நல்ல முன் உதாரணமாக இருப்பதை அறிவோம். ஜப்பான் நாட்டு பிரதமர் சென்ற ஆண்டு அரசு முறை சுற்றுப் பயணமாக நம் மண்ணிற்கு வந்த போது, ‘அட டீ கடைகளிலும் டிஜிட்டல் முறையில் QR CODE முறையில் பரிவர்த்தனையா?’ என வியந்து பாராட்டியதுடன் அப்படி ஒரு புரட்சியை ஜப்பானில் கொண்டு வர நமது தொழில்நுட்பங்களை பெற வேண்டுகோளும் […]

Loading

செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி–9: பிட் காயின், ஆல்ட் காயின், டோக்கன்

பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? மா. செழியன் பிளாக்செயின் தொழில்நுட்பம் பற்றி பேசும்போது, அதற்கு முதலில் வித்திட்ட பிட் காயின் பற்றி பேசாமல் இருக்க முடியாது. சதோஷி நகமட்டோ நிறுவனராக இருந்து, முதன் முதலாக உலகம் முழுவதும் உள்ள காகித கரன்சிகளுக்கு மாற்றாக டிஜிட்டல் குறியீட்டு நாணயமாக ‘பிட் காயின்’–ஐ வெளியிட்டார் அல்லவா? அதனை பின்பற்றி, பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேறு பல நிறுவனங்களும் அதற்கான கிரிப்டோ கரன்சிகளையும் வெளியிட்டார்கள். சில பிரபலமான […]

Loading

செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா ? பகுதி: 8- கிரிப்டோ கரன்சியில் ‘ஸ்டேக்கிங்’!

பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? மா. செழியன் பிளாக்செயினில் இயங்கும் ‘கிரிப்டோ கரன்சி’யில் ‘ஸ்டேக்கிங்’ (Staking) என்பதை பற்றி சென்ற பகுதியில் நாம் குறிப்பிட்டு இருந்தோம் அல்லவா? அதனைப் பற்றி சற்று விரிவாக அறிந்து கொள்வோம். பிளாக்செயின் வளர்ச்சிக்கு முதலீடு செய்வது ‘ஸ்டேக்கிங்’ (Proof-of-Stake–POS) என்று அழைக்கப்படுகிறது. 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டு கால முதலீட்டாளர்களுக்கு, வெகுமதிகளாக கிரிப்டோ கரன்சிகள், டோக்கன்கள் வழங்கப்படுகிறது. பிளாக்செயின் தொழில்நுட்ப பணிகளை செய்வோருக்கு வழங்கும் கிரிப்டோ வெகுமதிகள் […]

Loading

செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி 7 – பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

மாஸ்டர் நோட்ஸ்–காயின், டோக்கன்! மா. செழியன் பிளாக்செயின் தொழில்நுட்பம் என்பது மையப்படுத்தப்படாத, பரவலாக்கப்பட்ட தொடர் பதிவேட்டு தொழில்நுட்பம் என்று பார்த்தோம் அல்லவா? அப்படியானால், அதனை பராமரிப்பது யார்? சங்கிலித் தொடராக பிளாக்குகளை உருவாக்கி, வளர்ச்சியடைய செய்ய யார் முன்வருவார்கள். அதற்கான பல்வேறு தொழில்நுட்பப் பணிகளை, பிளாக்செயின் அடிப்படையில் யார் செய்ய முன்வருகிறார்களோ, அவர்களுக்கான பரிவர்த்தனை வெகுமதிகள்தான், பிளாக்செயின் தொழில்நுட்பத்திலான கிரிப்டோ கரன்சி மற்றும் டோக்கன்கள் என்பது. அதனை ஒருங்கிணைக்கும் தலைமை கட்டுப்பாட்டு முனையமே மாஸ்டர் நோட்கள் (Master […]

Loading