அந்த ஊரில் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டதாக ஊர் மக்கள் எல்லாம் அன்று ஒன்று கூடினார்கள். நல்ல காரியம் செய்யணும். மாலை. மரியாதை, கொட்டு மேளம் முழங்க இந்த இழப்பை நாம சரி செய்யணும். இத்தனை ஆண்டு காலம் தாயாய் பிள்ளையாய் தாயின் மடியாய் உறவாய் உன்னதமாய் இருந்தது இப்ப நம்ம கைவிட்டுப் போயிருச்சு” என்று நினைத்து அத்தனை பேரும் தேம்பித் தேம்பி அமுதார்கள். எல்லோர் கண்களிலும் கண்ணீர் நிரம்பி வழிந்தது . “இப்படி ஆகும்னு நினைச்சுக் […]