செய்திகள்

156-வது பிறந்த நாள் : காந்தி நினைவிடத்தில் பிரதமர், ஜனாதிபதி மரியாதை

ராகுல், முதல்வர் அதிஷி மலரஞ்சலி புதுடெல்லி,அக்.2– இன்று மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். தேசத்தந்தை மகாத்மா காந்தி அவரின் பிறந்த நாள் ‘காந்தி ஜெயந்தி’ இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் […]

Loading

செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு

பிரதமராக ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்பு கொழும்பு, செப். 25– இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசாநாயக்க இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டதுடன், நவம்பர் 14-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 2025 வரை இருக்கிறது. ஆனாலும், தேர்தல் வாக்குறுதியில் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைப்பதாகத் தெரிவித்திருந்ததன்படி, புதிய இலங்கை அதிபராக பொறுப்பேற்ற அநுர குமார திசநாயக உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நவம்பர் 14-ம் தேதி பொதுத் […]

Loading

செய்திகள்

முழுமையான வெற்றி கிடைக்கும் வரை ஹமாஸ் அமைப்புடன் போர் தொடரும்

அமெரிக்காவில் இஸ்ரேல் பிரதமர் கொக்கரிப்பு நியூயார்க், ஜூலை 26– போரில் முழுமையான வெற்றி கிடைக்கும் வரை, ஹமாஸ் அமைப்பினருடன் போரை தொடர்ந்து நடத்துவோம் என இஸ்ரேல் பிரதமர் கொக்கரித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ந்தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து ஹமாஸை […]

Loading

செய்திகள்

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள்

மோடிக்கு ஸ்டாலின் கண்டனம் சென்னை, ஜூலை25- அரசைப் பொதுவாக நடத்துங்கள். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-– மத்திய பட்ஜெட்டில் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாக பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். பிரதமர் மோடி அவர்களே… தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க […]

Loading

செய்திகள்

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார்

காத்மண்டு, ஜூலை 15– நேபாள நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி 4வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். நேபாளத்தில் கடந்த 2022ம் ஆண்டு முதல் நேபாள கம்யூனிஸ்ட்–மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்பகமல் தாஹல் என்ற பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த கூட்டணியில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட்–லெனினிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்த இரு தலைவர்களுக்கு இடையே பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. தற்போது பட்ஜெட் […]

Loading

செய்திகள்

மீண்டும் மோடி பிரதமர்: இந்தியா-இலங்கை உறவு புதிய பரிமாணம் தருமா?

ஆர் முத்துக்குமார் இந்தியா பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றது, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கான புதிய சகாப்தத்தை முன்னறிவிக்கிறது. தலைமைத்துவத்தில் இந்தத் தொடர்ச்சி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும், பொருளாதாரக் கொள்கைகள் முதிர்ச்சியடையும் மற்றும் குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தரும் சூழலை வளர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் தலைமையின் கீழ் தேசத்தை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், ‘மேக் இன் இந்தியா’ போன்ற லட்சிய முயற்சிகளில் இந்தியா இறங்கியுள்ளது டிஜிட்டல் உள்கட்டமைப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் […]

Loading

செய்திகள்

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி, ஜூன்.11- பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முதலாவது மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய மத்திய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நேற்று பிரதமர் மோடி இல்லத்தில் நடந்தது. அதில், கூட்டணி கட்சிகளின் அமைச்சர்கள் உள்பட அனைவரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, கிராமப்புற, நகர்ப்புறங்களில் […]

Loading

செய்திகள்

எல்.கே.அத்வானியை சந்தித்து மோடி ஆசி பெற்றார்

புதுடெல்லி, ஜூன்.8- 3-வது முறையாக பதவி ஏற்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை நேற்று நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதனையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான எல்.கே.அத்வானியை அவரது இல்லத்தில் நேற்று பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அத்வானிக்கு பூங்கொத்து கொடுத்து மோடி […]

Loading

செய்திகள்

மே 29 ந்தேதி எவரெஸ்ட் நாள்

ஆக்ஸிஜன் இல்லாமல் எவரெஸ்ட் ஏறி பாகிஸ்தான் வீரர் சிர்பாஸ் கான் சாதனை மலை ஏற்றத்தில் உள்ள சாவல்கள் என்ன? பாகிஸ்தான் மலையேறுபவரான சிர்பஸ் கான், ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் உலகின் உயரமான மலை உச்சியான எவரெஸ்ட்டின் உச்சத்தை, வெற்றிகரமாக தொட்டதன் மூலம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார். “இமேஜின் நேபாள் 2024 எவரெஸ்ட் பயணக் குழு” வின் ஒரு பகுதியாக சிர்பாஸ் கான் பங்கேற்றார், இந்த குழுவில் 14 சர்வதேச மலையேறுபவர்கள் மற்றும் 18 அனுபவம் வாய்ந்த ஷெர்பாக்கள் […]

Loading

செய்திகள்

5 ஆண்டுகளுக்கும் ஒரே பிரதமர் தான் : காங்கிரஸ் விளக்கம்

தேர்தல் முடிவு வெளியான 3 நாட்களில் பிரதமர் அறிவிக்கப்படுவார் சண்டிகார், மே.25- 5 ஆண்டுகளுக்கும் ஒரே நபர்தான் பிரதமராக இருப்பார். தேர்தல் முடிவு வெளியான 3 நாட்களுக்குள் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. மன்மோகன்சிங் தேர்வு ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒருவர் வீதம் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் பதவி வகிப்பார்கள் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பேசி வருகிறார்கள். அதற்கு விளக்கம் […]

Loading