புதுடெல்லி, ஜூன்.8- சுனாமி எச்சரிக்கை அமைப்பை உருவாக்க 29 நாடுகளுக்கு இந்தியா உதவியது என்று சர்வதேச பேரிடர் உள்கட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார். பேரிடர் மீட்சிக்கான உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க அவர் வேண்டுகோள் விடுத்தார். பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்புகள் தொடர்பான 2025-ம் ஆண்டின் சர்வதேச மாநாடு பிரான்சில் 2 நாள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த பிரதமர், மாநாட்டை நடத்துவதற்கு ஆதரவளித்ததற்காக […]