புதுடெல்லி, பிப்.17- 2030-ம் ஆண்டுக்குள், இந்தியாவின் வருடாந்திர ஜவுளி ஏற்றுமதி ரூ.9 லட்சம் கோடி இலக்கை எட்டும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். டெல்லி பாரத் மண்டபத்தில் ‘பாரத் டெக்ஸ் 2025’ என்ற ஜவுளித்துறை நிகழ்ச்சி கடந்த 14-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று முடிவடைகிறது. நேற்று அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு நடந்து வரும் பிரமாண்ட கண்காட்சியையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- ஜவுளித்துறை, பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் […]