அந்த அரசு மருத்துவமனையில் தினம் தினம் பிறப்பு, இறப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒரு பக்கம் சந்தோஷத்தின் சிரிப்பொலி. மறுபக்கம் அழுகையின் ஓலம் என்று இரண்டையும் சமமாகச் சுமந்து நிற்கும் அந்த மருத்துவமனை. உள்நோயாளிகள் புற நோயாளிகள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் வந்து போகும் அந்த இடத்தில் ஜோதிக்கு பிரசவறை மட்டும் தான் பிரதானம். அவள் வெள்ளை உடை உடுத்திய தேவதை. கோபம் என்பதை கொழுந்திலேயே கிள்ளி எறிந்து விட்டு அன்பை அடர்த்தியாய் அணிந்திருக்கும் அன்பு மகள். அவள் […]