சினிமா செய்திகள்

பின்னணி பாடகர், நடிகர் மாணிக்க விநாயகம் மரணம் :முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை, டிச.27- பிரபல சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். பிரபல சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம். இவர் அடையாறு சாஸ்திரி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மாணிக்க விநாயகத்துக்கு இதய கோளாறு ஏற்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73, மாணிக்க விநாயகம் 2001ல் தில் படத்தில் இடம் பெற்ற கண்ணுக்குள்ள கெளுத்தி வச்சிருக்கா […]