சென்னை, ஜன.5- என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜ.க. மகளிரணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிரணி தலைவி உமாரதி ராஜன், நடிகைகள் ராதிகா, குஷ்பு, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, […]