டெல்லி, பிப். 20– டெல்லியில் 4 வது பெண் முதலமைச்சராக, பாரதீய ஜனதாவை சேர்ந்த ரேகா குப்தா இன்று பதவியேற்கிறார் . டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைக்கிறது. டெல்லியின் புதிய முதலமைச்சரை அறிவிப்பதற்கான பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெல்லி ஷாலிமார் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ரேகா குப்தாவை முதலமைச்சராக நியமிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. 4 வது பெண் […]