சினிமா செய்திகள்

காதலுக்கு வயது தடையில்லை: ‘கேர் ஆப் காதல்!’

முதல் மரியாதை படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய தீபனை நினைவிருக்கிறதா? நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடுத்தர வயதில் அவரை மீண்டும் பார்க்க வைத்திருக்கும் ஒரு படம் கேர் ஆப் காதல். நிஜத்தில் எப்படி இருக்கிறார்களே, அதை அப்படியே நிழலில் காட்டியிருக்கிறார்கள். 49 வயதுவரை கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் கட்டை பிரம்மச்சாரியாகவே இருக்கும் ஒரு கதாபாத்திரம். மனிதர் நடித்ததாகவே தெரியாது. காரணம் மேக்கப் இல்லை, ஏற்ற இறக்க மாடுலேஷன் வசன உச்சரிப்பு இல்லை, டூயட் பாட்டு இல்லை, விசேஷ ஆடை அலங்காரம் இல்லை […]