சென்னை, பிப்.4– ரெயில்வே திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மத்திய அரசின் 2025–-26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்கள் மற்றும் கோவா ஆகிய ரெயில்வே துறைக்கு மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் திட்டங்கள் குறித்தும் அஸ்வினி வைஷ்ணவ் புதுடெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 2025-–26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரெயில்வே மேம்பாட்டுத் […]