செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி, டிச. 5– கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக, தேமுதிக, பாஜக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த […]

Loading

செய்திகள்

குஜராத்தில் பாஜக மகளிரணி தலைவி தூக்கிட்டு தற்கொலை

சூரத், டிச. 03– குஜராத்தில் பாஜக மகளிர் அணி தலைவி தீபிகா படேல், சூரத்தின் பிம்ராட் பகுதியிலுள்ள வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். குஜராத் மாநிலம், சூரத்தில் பாஜக மகளிர் அணி தலைவி தீபிகா படேல் (வயது 30) சூரத்தின் பிம்ராட் பகுதியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா பிணமாக மீ்ட்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை கூறுகையில், […]

Loading

செய்திகள்

விஜய் பாஜகவின் ‘சி’ டீம்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

புதுக்கோட்டை, அக். 28- தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் ‘சி’ டீம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் பேசுகையில், “பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று […]

Loading

செய்திகள்

கர்நாடக அமைச்சரின் மனைவியை கேவலமாக பேசிய பாஜக எம்எல்ஏ

கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெங்களூரு, அக். 18– கர்நாடக அமைச்சரின் மனைவி குறித்து, அவதூறாக பேசிய பாரதீய ஜனதா எம்எல்ஏ பசன கவுடா பாட்டீலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் குடும்பம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீல் யத்னல், “தினேஷ் குண்டுராவின் குடும்பத்தில் பாதி பாகிஸ்தான் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

2 மாநில சட்டமன்ற தேர்தல் தரும் பாடம்

தலையங்கம் அண்மையில் வெளிவந்த அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தியாவின் அரசியல் களத்தில் ஏற்பட்டு வரும் முக்கிய அரசியல் பரிமாணங்களையும், மாற்றங்களையும் வெளிப்படுத்துகின்றன. பாரதீய ஜனதா கட்சிக்கு (பாஜக) அரியானாவில் வெற்றி மிக முக்கியமானது. தேர்தலுக்கு முன் வெளிவந்த கருத்துக் கணிப்புகளை தாண்டி, மூன்றாவது முறை தொடர்ந்து வெற்றியை பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாதது என்பது மீண்டும் நிரூபணமாகி […]

Loading

செய்திகள்

மயிலப்பூர் நிதி நிறுவன மோசடி: கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு சொந்தமான 12 இடங்களில் சோதனை

தொலைக்காட்சி, நிதி நிறுவனத்துக்கு சீல் வைத்து குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை சென்னை, ஆக. 18– மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி ரூபாய் மோசடி செய்ததால் கைது செய்யப்பட்ட சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதனுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய 11 இடங்களில் குற்றப்பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தி வருதுடன் மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கும் அவருக்கு சொந்தமான தொலைகாட்சி நிறுவனத்திற்கும் போலீசார் சீல் வைத்தனர். சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்

டெல்லி, ஜூலை 24– இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு போதியளவு நிதி ஒதுக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2024 – 2025 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நேற்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றில் அதிக முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கிய செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விசாரணை

சென்னை, ஜூலை 20– பெரம்பூர் பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 11 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது ஆயுதங்களை பறிமுதல் செய்ய திருவேங்கடம் என்ற ரவுடியை அழைத்து சென்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் வேறு யாராவது மூளையாக செயல்பட்டார்களா?, பெரும் அளவில் பணம் ஏதாவது கைமாற்றப்பட்டு கூலிப்படைகள் மூலம் […]

Loading

செய்திகள்

ராகுல் காந்தியை அடைத்து வைத்து கன்னத்தில் அறைய வேண்டும்: பாஜக எம்எல்ஏ அநாகரிக பேச்சு

பெங்களூரு, ஜூலை 10– ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் அடைத்து வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என கர்நாடக பாஜக எம்எல்ஏ அநாகரீகமாக பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் வடக்கு மங்களூர் தொகுதி பாஜக எம்எல்ஏ–வாக இருப்பவர் பரத் செட்டி. இவர் ராகுல் காந்தியை பாராளுமன்றத்திற்குள் பூட்டி வைத்து கன்னத்தில் அறையை வேண்டும் என்று வரம்பு மீறி அநாகரீகமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேவலமான பேச்சு மேலும் ராகுல் காந்தி மங்களூரு வந்தாலும் […]

Loading

செய்திகள்

மணிப்பூர் மக்களுடைய கோபத்தின் அடையாளமாக நான்: மக்களவையை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்

டெல்லி, ஜூலை 3– மணிப்பூர் மக்களுடைய கோபத்தின் அடையாளமாகவே, ஒன்றிய அமைச்சரை தோற்கடித்து நான் நாடாளுமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்று கல்லூரி பேராசிரியர் நாடாளுமன்றத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஒன்றியத்தில் ஆட்சியமைத்த நிலையில், முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து கட்சி எம்.பிக்களும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில், எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக அரசை, பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.பி […]

Loading