செய்திகள்

ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் நாளை மோதல்

தம்புல்லா, ஜூலை 18– ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நாளை முதல் 26 ந் தேதி வரை இலங்கையில் உள்ள தம்புல்லா மைதானத்தில் நடக்கிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி ஏ பிரிவில் இருக்கிறது.பாகிஸ்தான், ஐக்கிய அரபுஎமிரேட்ஸ், நேபாளம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகியவை பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் […]

Loading

செய்திகள்

உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ்: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

லண்டன், ஜூலை 14– ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்தத் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று இந்திய நேரப்படி நேற்று இரவு பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை

இஸ்லாமாபாத், ஜூலை 6– பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு 6 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் வரும் 17 ந்தேதி மொகரம் பண்டிகைக் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் 13 ந்தேதி முதல் 18 ந் தேதி வரை சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. ஒன்றிய அரசிடம் கோரிக்கை இது தொடர்பான பரிந்துரையை […]

Loading

செய்திகள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை 6 ரன்களில் வீழ்த்தி இந்தியா திரீல் வெற்றி

நியூயார்க், ஜூன் 10– டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன்களில் வீழ்த்தி இந்தியா திரீல் வெற்றி பெற்றது. இந்தியா- – பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுகிறார்கள். இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதே நேரத்தில் இரு நாட்டு ரசிகர்கள் மனத்தில் பதட்டமும் குறையாது. அந்த அளவுக்கு இந்த இரு அணிகளின் ஆட்டம் விளையாட்டை தாண்டி ஒரு போராட்டம் போல் ரசிகர்கள் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் தொழிலதிபர் மோடிக்கு புகழாரம்

நியூயார்க், மே 16– அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் தொழிலதிபர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் வசித்து வருபவர் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் தரார். பாகிஸ்தானில் பிறந்த இவர், 1990-ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அந்நாட்டின் குடியுரிமை பெற்றார். அந்நாட்டின் முக்கிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பிலும் உள்ளார். குடியரசு கட்சியில் இருக்கும் அவர், டிரம்ப்பின் ஆதரவாளர். தொண்டு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகவும் உள்ள இவர், பால்டிமோர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தரார் கூறியதாவது:– […]

Loading

செய்திகள்

தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி கைது

சென்னை, மே.16-– தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்ட சென்னையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ஆதரவாக சிலர் இந்தியாவில் செயல்படுவதாகவும், குறிப்பாக தென் மாநிலங்களில் அவர்கள் ஊடுருவி இருப்பதாகவும் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தென் மாநிலங்களை குறிப்பாக தமிழகத்தை என்.ஐ.ஏ. போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த கண்காணிப்பு வலை யில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தான் – காங்கிரஸ் மறைமுக கூட்டு?: பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார ஆவேசம் சரியான முன் உதாரணமா?

ஆர்.முத்துக்குமார் தேர்தல் களத்தில் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவது வாடிக்கை தான். அது ஜனநாயக உரிமை என்பது வாதத்திற்கு உரியது. ஒரு பிரதமர் ரகசியம் காக்க உறுதி பிரமாணம் எடுத்து இருக்கும் நிலையில் சில சமாச்சாரங்களை வெளியிடுவதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். பிரதமரே அரசியல் பேச்சுக்காக பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் மீது அடுக்கலாமா? அப்படியே பொதுமக்களிடம் ஆவேசமாக பேசினால் அதில் உண்மையில் நியாயம் இருந்து, அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுத்தான […]

Loading

செய்திகள்

ராகுலை பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது: மோடி குற்றச்சாட்டு

ஆமதாபாத், மே 2– பலவீனமடைந்து வரும் காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், அவர்கள் ராகுலை பிரதமராக்க துடிக்கின்றனர்” என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:– குஜராத்தில் நான் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த தேர்தலில் ஆனந்த் மற்றும் கெடா மாவட்ட மக்கள் எல்லா சாதனைகளையும் முறியடிப்பார்கள். 2014ல் என்னை நாட்டுக்கு சேவை செய்ய […]

Loading