செய்திகள்

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி

* திருப்பூர் மாவட்டம் முதலிடம் * அனைத்து மாவட்டங்களும் 90% தேர்ச்சி * தமிழில் 35 பேரும், கணினி அறிவியலில் 6996 பேரும் ‘சதம்’ * 397 அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி சென்னை, மே 6– பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே (96.44%) அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத்தேர்வு முடிவை இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் […]

Loading

செய்திகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை, மே 4– கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. வரும் 28ந் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் காணப்படும். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனிடையே கடுமையான வெப்பம் நிலவும் இந்தக் காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் […]

Loading

செய்திகள்

‘மாணவர்களை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது’: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஏப்.27- பள்ளிகளில், குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோர் இணைந்து வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டிருப்பதாவது:-– பள்ளி மாணவர்கள் அதிகளவிலான உடல் ரீதியிலான தண்டனைகளை அனுபவிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பள்ளிகள், விடுதிகள், குடும்பங்களுக்குள்ளும் இதுபோன்ற தண்டனைகளை மாணவர்கள் சந்திக்கிறார்கள். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாத […]

Loading