செய்திகள்

2 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

நியூயார்க், ஏப். 20– இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாட உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தலைமையில் உற்சாக […]

Loading

செய்திகள்

‘பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கலாம் ’: சுப்ரீம் கோர்ட் அதிரடி

தீர்ப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு சென்னை, ஏப் 8– ‘‘தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ம் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் […]

Loading

செய்திகள்

தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூல்

ஸ்டாலின் வெளியிட்டார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்புத் துறையோடு கூட்டு முயற்சி சென்னை, மார்ச். 25– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ்-–இந்தோ-–ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலினையும், முதல் தொகுதி நூலினையும் வெளியிட்டார். 2022-–2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்மொழியின் தொன்மையையும் செம்மையையும் நிலைநாட்டிட, பிற உலக […]

Loading

செய்திகள்

விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசு அமைத்த தேடல் குழு செல்லாது

கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு சென்னை, மார்ச்.12- விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசு அமைத்த தேடல் குழு செல்லாது என்று கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள கவர்னர், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் (சென்னை) துணைவேந்தரை அடையாளம் காணுவதற்கான தேடல் குழுவை அமைத்து உள்ளார். இந்த குழுவில், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தின் விதிகள் மற்றும் 2018-ம் […]

Loading

செய்திகள்

விரைவில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: அமைச்சர் கோவி. செழியன்

வ்சென்னை, மார்ச் 6- பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக திகழ்ந்த கலைஞர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் நிறுவப்படும் என தெரிவித்திருந்தார். எழுந்து வந்த  தொடர் கோரிக்கைளுக்கு மத்தியில் தற்போது அமைச்சர் செழியன் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என […]

Loading

செய்திகள்

மாநில ஆசிரியர் தகுதித்தேர்வை பல்கலைக்கழக பங்களிப்புடன் ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்தும்

அமைச்சர் கோவி.செழியன் தகவல் சென்னை, டிச.25- மாநில ஆசிரியர் தகுதித்தேர்வை (செட்) பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமே நடத்தப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 1987-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம், அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்வது மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சட்டக் கல்வி இயக்ககம் […]

Loading