சென்னை, அக்.28 மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரி, சுந்தரப்பன்சாவடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– மயிலாடுதுறை மாவட்டம், பாகசாலை காவல் நிலையத்திலிருந்து அயல் பணியாக மயிலாடுதுறை மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்துவந்த காவலர் பரந்தாமன் (வயது 39) என்பவர் நேற்று (27–ந் தேதி) பிற்பகல் சுமார் 2 மணியளவில் பணி முடிந்து இருசக்கர […]