வாழ்வியல்

உடலில் உறுதி – சுறுசுறுப்பு உண்டாக என்ன செய்ய வேண்டும்?

உடலில் உறுதியும் தேக மினுமினுப்பும் சுறுசுறுப்பும் உண்டாக வேண்டுமானால் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலவையை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் போதும். வெந்தயம் 250 கிராம், ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும். இதை நாள்தோறும் ஒரு ஸ்பூன் அளவு இரவில் மிதமான சுடுநீரில் போட்டு குடித்து வந்தால் உடலில் உறுதியும் தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும். எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்கும். […]

வாழ்வியல்

பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் கற்றாழை

பற்கள் மற்றும் ஈறுகள் நமது உடலில் மற்ற உறுப்புகளை போலவே மிகவும் முக்கியமான உறுப்புக்கள். ஈறுகள் மற்றும் பற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமாகும். தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை சிறிதளவு மென்று சாப்பிட்டு வந்தால் ஈறுகள் பலம் பெறும். பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதிலும் கற்றாழை உதவுகிறது.

வாழ்வியல்

தலைக் கபத்தை குறைக்கும் தூதுவளை

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும் பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண […]