தலையங்கம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கடுமையாக இருந்ததால் வெள்ளம் உருவாகி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி இந்த மழை இயல்பை விட 34 சதவீதம் அதிகமாகப் பெய்து உள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 21 வரை வடகிழக்கு பருவமழையின் பொழிவில் தமிழகத்தின் சராசரி மழை 42 செமீ என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டில் 57 செமீ வரை மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் வழக்கமான 77 செமீ மழைக்கு […]