பெங்களூர், ஜன. 24– கர்நாடக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கிச்சா சுதிப், புலி, நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர். கொரோனாவால் கர்நாடக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை அம்மாநில அரசு இந்த வாரம் வெளியிட்டிருந்தது. இதில் 2019ல் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான […]