டெல்லி, மே 28– டெல்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14ஆம் தேதி திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே பணியிட […]