செய்திகள்

பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு பிரதமர் நிதி உதவி

புதுடெல்லி, பிப்.13- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அச்சன்குளம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அதில், 17 பேர் பலியானார்கள். 30-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தநிலையில், பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலர் பலியாகி இருப்பது பெரும் கவலை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், பலியானோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை […]

செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

விருதுநகர், பிப்.13– சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் நேற்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன. […]

செய்திகள்

19 பேரை பலிகொண்ட பட்டாசு ஆலை விபத்தில் இன்ஜினீயரிங் மாணவி

விருதுநகர், பிப். 13– விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியுடன் இயங்கும் இந்த ஆலையில் 20க்கும் […]