சென்னை, ஆகஸ்ட்6- நந்தனம் அரசு கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு இளங்கலை விலங்கியல் பட்டப்படிப்புக்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலை நந்தனம் அரசினர் ஆண்கள் கல்லூரியில், 16 வகையான இளங்கலை படிப்புகள், 13 வகையான முதுகலை படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளில் சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் (2023–24-ம் கல்வியாண்டு) படித்து வந்தனர். இந்த நிலையில், ஆண்கள் கல்லூரியாக இருந்த நந்தனம் அரசு கல்லூரியில், இளங்கலை […]