செய்திகள்

மீண்டும் குறைந்தது தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.51,320க்கு விற்பனை

சென்னை, ஜூலை 29– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து, ரூ.51,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, கடந்த மே 20ம்தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்துவந்த நிலையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நாகரிகமாக விவாதம் நடத்த வேண்டும்

புதுடெல்லி, ஜூலை 26-– பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இது, மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 22-ம் தேதி தொடங்கியது. 23-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், நேற்று முன்தினம் தொடங்கியது. அதன் மீது பேசிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பட்ஜெட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாதுகாப்பு துறைக்கு பலம் தரும் பட்ஜெட்

ஆர். முத்துக்குமார் இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நிதி ஒதுக்கீடு மிக அதிக அளவில் ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பெற்று இருக்கிறது. கடந்த நிதியாண்டில் ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் நடப்பு நிதியாண்டில் ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது அனைத்து அமைச்சக ஒதுக்கீடுகளை விட மிக உயர்ந்ததாகும். மூலதனச் செலவாக ரூ.1.72 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு 12.9 சதவீதமாக உள்ளது. மேலும் உள்நாட்டு மூலதன […]

Loading

செய்திகள்

எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட முடியாது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எந்தவொரு மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பொது பட்ஜெட், நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று துவங்கியதும், பட்ஜெட் ஒருதலைபட்சமானது என்று கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் […]

Loading

செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: ‘‘நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூலை 24-– மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் தான்பங்கேற்க போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கக்கூடிய பட்ஜெட், மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. 3-வது முறையாக வாக்களித்த மக்களுக்கு, பா.ஜ.க. கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்ய தயாராக […]

Loading

செய்திகள்

நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் பட்ஜெட்: மோடி பாராட்டு

புதுடெல்லி, ஜூலை24-– நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும் பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் பேசியதாவது:- 2024–-2025 பட்ஜெட், கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை வளமையான பாதைக்கு அழைத்துச் செல்லும். புதிய நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் தொடர் நடவடிக்கையாக இந்த பட்ஜெட்டை பார்க்கலாம். இளைஞர்களுக்கு எண்ணற்ற […]

Loading

செய்திகள்

பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு எதிரொலி: தங்கம் விலை 2வது நாளாக வீழ்ச்சி

மேலும் குறைய வாய்ப்பு சென்னை, ஜூலை 24– மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சமீப காலமாக தங்கத்தின் விலை கடுமையான ஏற்றத்தைக் கண்டுவந்தது. மிக அதிகபட்சமாக ஒரு சவரன் தங்கம் ரூ.55,240 வரை அதிகரித்து விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்து வருவதைக் கண்டு நகை வியாபாரிகளும், நகை வாங்குவோரும் கவலை அடைந்தனர். இந்நிலையில், மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்

டெல்லி, ஜூலை 24– இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு போதியளவு நிதி ஒதுக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2024 – 2025 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நேற்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றில் அதிக முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கிய செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி […]

Loading

செய்திகள்

வரி சலுகைகள்: 2024 பட்ஜெட் அறிவிப்பின் தாக்கங்கள் மற்றும் நன்மைகள்

மக்கள் குரல் இனைய குழுமத்தின் திறன் ஆய்வு 2024 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள வரி மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாற்றங்கள் வரி செலுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கின்றன, அதேசமயம் அரசின் வருவாய் தேவைகளையும் சமநிலைபடுத்துகின்றன. மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இதன் தாக்கங்கள் மற்றும் நன்மைகள் பற்றிய ஒரு அலசல் இங்கே. பிரதான மாற்றங்கள்: தனிநபர்களுக்கு தாக்கங்கள்: நிறுவனங்களுக்கு தாக்கங்கள்: 2024 பட்ஜெட்டின் புதிய வரி நிலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்குவதை […]

Loading

செய்திகள்

நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி ஜனாதிபதி வாழ்த்து

புதுடெல்லி, ஜூலை 23– நாடாளுமன்றத்தில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த மார்ச் மாதம் 2024–25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மோடி அரசின் கீழ் நிர்மலா சீதாராமன் தாக்கல் […]

Loading