சிறுகதை

படைப்பு – ராஜா செல்லமுத்து

சமரன் ஒரு படைப்பாளி. சமரசமில்லாத படைப்பாளி. அவரின் எழுத்துக்கள், பேச்சுக்கள் எல்லாம் ஒரு சமுக மாற்றத்திற்கான விஷயமாக இருக்கும். சாதாரண விஷயங்களை எழுதிக் கொள்ளாத சமரன், சமரசம் இல்லாத பிரச்சினைக்குரிய எழுத்துக்களை, நிகழ்வுகளை விஷயங்களை எழுதத் தவறுவதே இல்லை. அதனால் அவருக்கு சில எதிர்ப்புகளும் வந்ததுண்டு. அதையெல்லாம் ரொம்பவே லாவகமாகச் சமாளிப்பார். எழுத்தாளர் என்றால் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும். அப்போது தான் ஒரு உண்மையான எழுத்தாளனாக இருக்க முடியும் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொள்வார் சமரன். […]