சுவேதாவிற்கு இரவு வந்தால் போதும் நடுக்கம் ஏற்படும் ‘ஏன் தான் இந்த ராத்திரி வருகிறது. பகலாகவே இருந்துவிடக் கூடாதா? என்று பயத்தில் அவளது உயிர் அணுக்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவள் நெற்றிப் பொட்டில் வந்து ஒட்டிக் கொள்ளும். இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு இன்னும் அந்த அவஸ்தையை அவள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறாள். ‘யார் சொன்னது ? ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என்று ? எனக்கு வாய்த்த கணவனுக்கு இறப்பு வரை […]