இஸ்லாமாபாத், ஜூலை 6– பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு 6 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் வரும் 17 ந்தேதி மொகரம் பண்டிகைக் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் 13 ந்தேதி முதல் 18 ந் தேதி வரை சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. ஒன்றிய அரசிடம் கோரிக்கை இது தொடர்பான பரிந்துரையை […]