ட்ரோன் மூலம் புனித நீர் தெளிப்பு தூத்துக்குடி. ஜுலை. 07 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர கோஷம் எழுப்பினார்கள். விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், திருவாவடுதுறை மற்றும் தர்மபுரம் ஆதின மடாதிபதிகள் பங்கேற்றனர். முருகப்பெருமானின் 6 படைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி […]
![]()





