வாழ்வியல்

கண்பார்வை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த…….

கொத்தவரங்காய் மிகவும் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கொத்தவரங்காய் புரதம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றை அதிகமாக கொண்டுள்ளது. வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இரும்புச்சத்து இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது. கொத்தவரங்காய் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ உங்கள் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

வாழ்வியல்

சுவாசத் தொந்தரவுகளை நீக்கும் கொள்ளு

கொள்ளுவை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால் உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும்; சுவாசத் தொந்தரவு நீங்கும்; காய்ச்சலையும் குணமாக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. கொள்ளு சாப்பிட்டுவந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும். இதை அரிசியுடன் சேர்த்துக் […]

செய்திகள்

தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி 70% அதிகரிப்பு

சென்னை, அக். 9– தமிழ்நாட்டில், தற்போது நோய் எதிர்ப்பு சக்தியின் விகிதம் 70 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் உருவாகி உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்து, தமிழ்நாடு சீரோ அமைப்பு கடந்த ஜூலை மாதம் ஆய்வுப் பணியை துவங்கியது. நோய் தொற்றுக்கு ஆளான 22,000-க்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், தமிழ்நாட்டில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. முன்னதாக சென்னையில் 94 விழுக்காடும், திருநெல்வேலி […]

வாழ்வியல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முளைகட்டிய பயறுகள்

முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும். முளைகட்டிய பயறுகளில் உள்ள உடலுக்கு ஆற்றல் தரும் மருத்துவ குணம் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அவற்றின் விபரம் வருமாறு:– இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட் இவற்றில் உள்ளதால் நம் உடலில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலைத் தடுக்கிறது. இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது; ரத்த விருத்திக்கும் […]

வாழ்வியல்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சர்க்கரை வல்லிக் கிழங்கு

சர்க்கரை வல்லிக் கிழங்கு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கிளைசெமிக் இண்டெக்ஸ் எனப்ப‍டும் வேதிபொருள் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம். அதுமட்டுமல்ல‍ அவர்களின் உடலுக்குத் தேவையான அனைத்து ஆற்றல்களையும் இது கொடுக்கும். சர்க்கரை வல்லிக் கிழங்கு சாப்பிட்டால் அது நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதைச் சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்று சொல்வதை விட சர்க்கரை கொல்லிக் கிழங்கு என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் மருத்துவர் […]

வாழ்வியல்

உடலைப் பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தி தரும் பீர்க்கங்காய்

மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, புண்கள் வராமலும் காக்கும். ஒட்டுமொத்த உடலையுமே குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடியது. சிறுநீர் கழிக்கும் போது உருவாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்தக்கூடியது. எடை குறைக்க முயற்சி செய்கிறவர்களுக்கு பீர்க்கங்காய் […]