திருநெல்வேலி, ஜூலை 29– பணகுடி அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 10 ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த ரோஸ்மியா புரத்தை சேர்ந்தவர் அரிராம். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் விவசாயம் பார்த்து வருவதோடு 30-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு அவரது தோட்டத்தில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இன்று வழக்கம் போல […]