திருப்பத்தூர், ஜூலை 13– ஆம்பூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் பெண் பலியானார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஏலகிரி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலி மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஏலகிரி பகுதியை சேர்ந்த திலகம் (60)என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் வெங்கட்ராமன் (67)மற்றும் மகன் பிரகதீஸ்வரன் (35) […]