சென்னை, அக். 2– ‘‘கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்விலும் உயர்வு ஏற்படுத்திட, கதர்த் தொழிலுக்குக் கை கொடுப்போம்’’ என்று இன்று உத்தமர் காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘‘அணிந்து மகிழ்வோம் கதராடைகளை ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை’’ என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழ்நாட்டிலுள்ள கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதார மேம்பாட்டினையும், அவர்களது நலன்களையும் […]