சிறுகதை

நீர்த் தாரை – யாசிர் அரபாத் அசனி

இருளின் பிடியிலிருந்து பகல் கொஞ்சம் கொஞ்சமாக நழுவத் தொடங்கியது. தவலைகளின் சப்தங்கள் ஓயத் தொடங்கின. நிசப்தம் விரவிக் காணப்பட்டது. வாகனக் கண்ணாடியில் புகை போல் காணப்பட்டது பனியின் மிச்சம். இரவு முழுவதும் தாழ்ப்பாளில் சிக்கிக் கொண்ட இருக் கதவுகளை விடுவித்து ஃபஜர் நேரத் தொழுகைக்கு வெளியேறினார் ஹபீப். தெரு முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. இரவு முழுவதும் மாடுகள் கடந்தச் செய்தியைச் சாணம் சொன்னது. பள்ளிக்குள் சென்று தொழுகையில் ஈடுபட்டார். பள்ளிவாசலுக்கு எதிரில் தேநீர்க் கடை வைத்திருக்கும் கணேசன் […]