செய்திகள்

அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதி செல்போன்கள் ஒட்டுக்கேட்பு

புதுடெல்லி, ஜூலை 19– 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதி, தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் இஸ்ரேலிய உளவுமென்பொருளான பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. பிரான்சை சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பான பர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து இதை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் கண்காணிப்பு நிறுவனமான என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் செயலி மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் அரசுக்கு விற்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி […]

சிறுகதை

இறுதி வாதம் – சாந்திகுமார்

அன்று நீதிமன்ற வளாகத்தில் என்றுமில்லாத அளவுக்கு மக்கள் கூடியிருந்தனர். பத்திரிகை நிருபர்கள், ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு புறம். குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மருத்துவர் பூவரசனின் குழாமைச் சேர்ந்தவர்கள் மறுபுறம், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் என்று பல தரப்பினரும் கூடியிருந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் பூவரசனின் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையின் சரியான சிகிச்சை, சரியான நேரத்தில் கிடைக்காததால் தான் மரணம் […]

செய்திகள்

நீதிபதி மீது செருப்பு வீசியவருக்கு 18 மாத சிறை

அகமதாபாத், ஜூன் 5– குஜராத்தில் நீதிபதி மீது செருப்பு வீசிய நபருக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் ஐகோர்ட்டில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கு ஒன்றை நீதிபதி கே.எஸ்.ஜாவேரி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடுத்தடுத்து செருப்பு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இரு செருப்புகளும் அவர் மீது படவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த ராஜ்கோட் மாவட்டம், பாயாவதர் பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரரான பவானிதாஸ் பாவாஜி என்பவரை பிடித்து போலீசார் வழக்கு […]

செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த நீதிபதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, மே.19- கொரோனாவால் உயிரிழந்த நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீஷ் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கொரோனா நோய்த் தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீஷ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி […]