புதுடெல்லி, ஜூலை9-– ‘நீட்’ முறைகேடு வழக்கில் வினாத்தாள் கசிவு தெளிவாகி இருக்கிறது, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மே 5ம்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய இந்த தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என பல்வேறு புகார்கள் எழுந்தன. ஜூன் 4ம்தேதி தேர்வு […]