செய்திகள்

வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு: ஆய்வு நிறுவனம் தகவல்

திருவனந்தபுரம், செப். 3– வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகில் உள்ள மூன்று மலை கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 400க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பதும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர் என்பதை அறிவோம். நிலச்சரிவுக்கு வாய்ப்பு இந்த நிலையில் வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி

இஸ்லாமாபாத், ஆக. 30– வடக்கு பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள மைதான் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு சரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண், ஒன்பது குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கிய […]

Loading

செய்திகள்

வயநாடு நிலச்சரிவு நிவாரணம்: ஆந்திரா சார்பில் ரூ.10 கோடி நிதி

திருவனந்தபுரம், ஆக. 17– கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நிவாரண நிதிக்கு, ஆந்திரா சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை மேப்பாடி, அட்டைமலை ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. நூற்றுக்கணக்கானோர் மண்ணில் உயிருடன் புதைந்தனர். […]

Loading

செய்திகள்

வயநாடு நிலச்சரிவு : ‘இயற்கை பேரிடரை தேசிய பேரழிவாக அறிவிக்க விதிகளில் இடமில்லை’

மத்திய அரசு தகவல் இயற்கை பேரிடரை தேசிய பேரழிவாக அறிவிக்க விதிகளில் இடமில்லை என காங்கிரஸ் தலைமையிலான அரசு 2013ல் அளித்த பதிலை, வயநாடு நிலச்சரிவு தொடர்பான கோரிக்கைக்கு மத்திய அரசு சுட்டிக்காட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இயற்கை பேரிடரை தேசிய பேரழிவாக அறிவிக்கும் விவகாரத்தில் கடந்த […]

Loading

செய்திகள்

மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.5 கோடி நிதி: கேரள முதலமைச்சரிடம் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

சென்னை, ஆக. 1– நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5 கோடிக்கான காசோலையை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தம்முடைய ஆழ்ந்த வருந்தங்களையும் இரங்கலையும் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டிலிருந்து […]

Loading

செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 284 பேர் மரணம்: ஒரே நாளில் 98 சடலங்கள் மீட்பு

வயநாடு, ஆக. 1கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி சூரல்மலை ஆகிய மலைப்பகுதிகளில் கடந்த திங்களன்று நள்ளிரவில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்று ஒரே நாளில் 98 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.மீட்கப்படும் சடலங்கள் சூரல்மலை பள்ளிகளில் ப்ரீசரில் வரிசையாக வைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது. அடையாளம் காணமுடியாத அளவுக்கு சடலங்கள் சிதைந்து காணப்படுகின்றன. மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மேற்கு தொடர்ச்சி மலையின் குமுறல்

ஆர். முத்துக்குமார் ஆண்டுக்கு ஆண்டு மழைகாலம் வருவதும், அப்போது அதீத மழைபொழிவில் கேரள மாநிலத்தில் நில சரிவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது, இம்முறை வயநாட்டில் உள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 160 பேர் உயிரிழந்துள்ளனர். பசுமையான மலைச்சரிவுகள் மற்றும் செழிப்பான சாகுபடி நிலங்கள் மரண ஓலங்களுக்கிடையே வெறிச் சோடிக் கிடக்கின்றது. உயிர் சேதம்மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய இயலாது; மக்கள் வாழ இயலாது என்ற நிலைமைக்கு […]

Loading

செய்திகள்

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு

கேரளாவில் இரு நாள் துக்கம் அனுசரிப்பு வயநாடு, ஜூலை 30- கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இதனால் குறைந்தது 170 பேர் உயிரிழந்துள்ளனர். இது மாநிலத்தை தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரழிவாகும்.சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது. மாநில மக்களிடத்தில் உணர்ச்சிமிகு அழைப்பு விடுத்த முதலமைச்சர் பினராய் விஜயன், 2018 வெள்ளப் பேரழிவின் பின்னர் காட்டிய ஒருமைப்பாட்டை மீண்டும் பயன்படுத்தி, […]

Loading

செய்திகள்

வயநாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் பலி: 30 பேர் மாயம்

திருவனந்தபுரம், ஜூலை 31– வயநாட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மேம்பாடி பகுதிகளில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு ஊரையே காணவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், முண்டக்கை கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அந்த குடும்பத்தினர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், புலம்பெயர்ந்து முண்டக்கை கிராமத்தில் தற்போது […]

Loading

செய்திகள்

கேரளாவில் கனமழை ; வயநாட்டில் 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு: 47 பேர் பலி

ஆயிரக்கணக்கானனோர் சிக்கி தவிப்பு மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள், 225 ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: மோடி அறிவிப்பு திருவனந்தபுரம், ஜூலை 30– வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 44 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 1000க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், 225 ராணுவ […]

Loading