சிகாகோ, செப்.7– பி.என்.ஒய். மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு அரசின் பல்வேறு முன்னெடுப்புகள், உலகளாவிய நிறுவனங்களின் கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கும் காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது. தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சிறப்பான வளர்ச்சியைப் […]