கிருஷ்ணகிரி, செப். 7– நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமனால் நடத்தப்பட்ட போலி என்சிசி முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, காவேரிப்பட்டணம் சந்தைபாளையம் பகுதியைச் சேர்ந்த என்சிசி பயிற்சியாளர் கோபு என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிவராமன் […]