நாடும் நடப்பும்

ரேஷன் கடைகள், அம்மா உணவகம்: ஸ்டாலின் உத்தரவு பாராட்டுக்குரியது

கொரோனா தொற்று ஏற்படுத்த வரும் மாற்றங்கள் நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார் இருதலைக் கொள்ளி எறும்பு! அதாவது ஒரு கட்டையின் இருபுறமும் தீ எரிந்து கொண்டு இருக்க நடுவே மாட்டிக் கொண்ட எறும்பு அதிர்ச்சியுடன் இருபக்கமும் செல்ல முடியாமல் நடுக்கத்துடன் தவித்துக் கொண்டிருக்கிறது என்ற அந்த பழமொழி உவமைக்கு நல்ல எடுத்துக்காட்டு தற்போதைய கொரோனா தொற்று பரவல் நம் முன் ஏற்படுத்தி இருக்கும் சிக்கல்! கொரோனா பெரும் தொற்றின் காரணமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் […]

நாடும் நடப்பும்

நாளை பதவி ஏற்பு! நேற்றே அரச கட்டளை!!நல்லாட்சி துவக்கம் : இது ஸ்டாலின் ஸ்டைல்

நாளை தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்படிப்பட்ட ஆட்சியை தரப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு தமிழகமெங்கும் இருக்கிறது. அமைச்சர்கள் யார் யார்? மூத்த அதிகாரிகள் யாருக்கு பொறுப்பு மிகுந்த பதவிகள்? போன்ற கேள்விகளுக்கு விடை தரும் முன் அவர் சந்திக்க இருக்கும் மிகப்பெரிய சோதனை – இந்த கொரோனா பெரும் தொற்று பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை எப்படிக் காப்பாற்றுவது? என்பதுதான். பதவி ஏற்க வரும் முன் இருக்கும் பட்டாபிஷேக கோலாகலத்தை விரும்பாதவர் […]

நாடும் நடப்பும்

மக்களின் ஆதரவு யாருக்கு? வாக்கு எண்ணிக்கை மே 2

5 மாநிலங்களில் சிக்கல்இல்லா சிறப்பான வாக்குப் பதிவு சபாஷ்! தேர்தல் ஆணையம் ஒரு வழியாக 8 வது இறுதி கட்ட வாக்களிப்பு மேற்கு வங்கத்தில் முடிந்து விட்டது. ஆக கடந்த 2 மாதங்களாக 5 மாநிலங்களில் நடந்த பரபரப்பு தேர்தல் பணிகள் நேற்றோடு நிறைவு பெற்றது. அடுத்தது நாட்டின் பார்வை எந்த மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாகிவிட்டனர். நாளை மறுநாள் வெளிவர இருக்கும் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு வரும் தேர்தல் […]

நாடும் நடப்பும்

ஆயூஷ் அமைச்சகத்தை விழிப்புடன் செயல்பட தவறி விட்டார் மோடி

சித்த, ஓமியோ மருத்துவ சிறப்புகளை உணர்வோம் நாடெங்கும் கொரோனா பெரும் தொற்றின் பரவல் சுனாமி அலை போல் பெருகி வருவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. பங்குச்சந்தை குறியீடும் வீழ்ச்சியை கண்டு வருவது நாம் சந்திக்க இருக்கும் பொருளாதார ஆபத்துக்களை தான் சுட்டிக் காட்டுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில் மருத்துவ வசதிகளுக்குத் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. பல இல்லங்களில் ஒரே சமயத்தில் குடும்பத்தார் அனைவரும் […]

நாடும் நடப்பும்

தொற்றை சமாளிக்க அவசரகால அணுகுமுறைகள்

பிரிக்சிட் – அதாவது பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது சரியா? தவறா? என்ற சர்ச்சை முடிவுக்கு வருவதாக தெரியவில்லை! ஆனால் வெளியேறிய பிறகு பல அவசர நடவடிக்கைகளை பிரிட்டன் தங்கள் மக்களுக்காக எடுக்க முடிந்தது. குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு வழங்க லண்டனில் தலைவர்கள் உடனடியாக முடிவு எடுக்க முடிந்ததற்கான காரணமே அவர்கள் ஐரோப்பிய யூனியனின் சட்ட திட்டங்களில் இருந்து வெளியேறி விட்டதால் தான். ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டப்படி எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒரு […]

நாடும் நடப்பும்

தமிழகத்தின் நலன் காக்க வெற்றி வியூகம்: சபாஷ் எடப்பாடி, பன்னீர்செல்வம் ‘டீம்’

மத்திய மாநில உறவுகளில் புது அத்தியாயம் * மதுரை, கன்னியாகுமரியில் பிரதமரே வந்து பிரச்சாரம் * கிராம வளர்ச்சிகளைக் கண்டு மத்திய அமைச்சர்கள் பிரமிப்பு ‘இரட்டை இலை’ அலை, திணறுகிறது தி.மு.க. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை பொற்கால ஆட்சி என வர்ணிப்பது அரசியல் வாய்ஜால வார்த்தை மட்டும் இல்லை , அது நிதர்சனமான உண்மை.. அவரது ஆட்சிக் காலம் ஏப்ரல் 13, 1954 முதல் மார்ச் 15, 1962 வரையாகும்! பிறகு பிப்.13, 1967 வரையும் காங்கிரஸ் […]

நாடும் நடப்பும்

எடப்பாடி, ஓபிஎஸ் இரட்டை குழல் பீரங்கி பிரச்சாரம்: அண்ணா தி.மு.க.வில் புதுத் தெம்பு

தமிழகமெங்கும் ‘இரட்டை இலை’ அலை அதிர்ச்சியில் தி.மு.க. தேர்தல் ஆலோசக கம்பெனி தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நாள் ஏப்ரல் 6 நெருங்கிவிட்ட நிலையில் அனைத்து கட்சிகளின் பிரச்சாரங்களும் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அண்ணா தி.மு.க.வின் வெற்றிக்காக தமிழகமெங்கும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் முன்பு ஜெயலலிதாவிற்கு கிடைத்த அதே உற்சாக வரவேற்பு, இவர்களுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் பிரச்சார பாணியிலேயே […]

நாடும் நடப்பும்

அண்ணா தி.மு.க.வின் 10 ஆண்டு பொற்கால ஆட்சியின் சாதனைகள்!

* கல்வியில் மேன்மை * தொழில் வளர்ச்சியில் முதன்மை * பெண்கள் முன்னேற்றம் * விரிவான மருத்துவ வசதிகள் இலவசமாக பை நிறைய மாதாந்திர மளிகை சாமான்கள் அடுத்த வாரம் ஏப்ரல் 6 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்றுவிடும். முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாள் மே 2. அதுவரை பரீட்சை முடிவுகளுக்கு காத்திருக்கும் மாணவர்களின் பதட்டத்தை மனதில் கொண்டு தமிழகம் காத்திருக்கும். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சியின் சாதனைகளை திரும்பிப் […]

நாடும் நடப்பும்

தமிழகத்தின் நலம் காக்க அண்ணா தி.மு.க. ஆட்சியே தொடர வேண்டும்

கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகமெங்கும் நடந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். இம்முறையும் சட்டமன்ற தேர்தலில் இரு முக்கிய போட்டியாளர்களாக இருப்பது அண்ணாதி.மு.க. கூட்டணியும், தி.மு.க. கூட்டணியும் தான். தேசிய கட்சிகளில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா அண்ணா தி.மு.க.வில் இணைந்து இருக்கிறது. நாடெங்கும் செல்லா காசாகி விட்ட காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் களத்தில் இருக்கிறார்கள். அண்ணா தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதாவுடன் பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் […]

நாடும் நடப்பும்

தமிழகத்தின் உரிமைகளை மீட்ட அண்ணா தி.மு.க: நல்லாட்சியை தரும் உறுதியில் பாரதீய ஜனதா

தோல்வி பயத்தில் ஸ்டாலின் – ராகுல் வெற்றி சரித்திரம் படைக்க வரும் இரட்டை இலை, மாம்பழம், தாமரை சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் ராகுல்காந்தி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.கவை மிகச் சிறந்த கட்சியினர் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார். கூடவே அண்ணா தி.முக.வும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறியுள்ளது தமிழக வாக்காளர்களை சிந்திக்க வைக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் […]