செய்திகள்

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ்

ரூ.1,000 கோடி நிவாரணம் வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தல் டெல்லி, டிச. 02– தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்துள்ளதுடன், வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக விழுப்புரம், புதுச்சேரி, […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு அதானி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கோஷம் புதுடெல்லி, நவ. 25– நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தொடர் முழுவதும் […]

Loading

செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு

பிரதமராக ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்பு கொழும்பு, செப். 25– இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசாநாயக்க இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டதுடன், நவம்பர் 14-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 2025 வரை இருக்கிறது. ஆனாலும், தேர்தல் வாக்குறுதியில் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைப்பதாகத் தெரிவித்திருந்ததன்படி, புதிய இலங்கை அதிபராக பொறுப்பேற்ற அநுர குமார திசநாயக உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நவம்பர் 14-ம் தேதி பொதுத் […]

Loading