‘‘டீ, பிஸ்கெட்டுடன் காத்திருக்கிறேன்’’ புதுடெல்லி, ஆக. 2– தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு சதித் திட்டம் தீட்டியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் ராகுல் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘பாராளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த எனது பேச்சு சிலருக்குப் பிடிக்கவில்லை. பட்ஜெட் கூட்டத்தில் இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பழங்குடி நலன் தொடர்பான திட்டங்கள் ஏதுமில்லை என்றும் எடுத்துரைத்தேன். இது மத்திய அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. […]