செய்திகள்

செவ்வாய்க் கோளில் நில அதிர்வு: நாசாவுக்கு தகவல் சொன்ன ரோவர்

வாஷிங்டன், ஏப். 3– செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதை நாசாவின் ‘இன்சைட் ரோவர்’ பதிவு செய்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கிளை நிறுவனமான ஜெட் புரோபல்யூஷன் லேபரட்டரி, ‘இன்சைட் ரோவர்’ என்கிற சிறிய ரக ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. 2ஆண்டுகளாக இந்த சிறிய கருவி செவ்வாய் கிரகத்தில் தான் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் முக்கிய தகவல்களைத் திரட்டி அவ்வப்போது நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்பிவரும் […]

வாழ்வியல்

சனிக்கிரகத்தின் வண்ண வளையங்கள் படிப்படியாக குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சனிக்கிரகத்தின் சிறப்பம்சம் அதைச் சுற்றியுள்ள வண்ண வளையங்கள் ஆகும். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வாயேஜெர் செயற்கைக் கோள்கள் மூலம் பெறப்பட்ட புகைப் படங்களையும் தற்போதைய தொலைகாட்டி புகைப் படங்களையும் ஒப்பிடும்போது சனிக்கிரகத்தின் வளையங்கள் படிப்படியாக குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து தெரிவித்துள்ளனர். சனிக்கிரகத்தின் வளையங்கள் பனித் துகள்களாலும் பாறை துகள்களாலும் ஆனது. இவை சுமார் 100 மில்லியன் வருடங்கள் பழமையானது. சூரிய ஒளியில் உள்ள புறஊதாக் கதிர்கள் அதன் மீது படும்போது அவை மின்னேற்றம் அடைகின்றன. […]

செய்திகள்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து ‘பெர்சிவரன்ஸ் ரோவர்’ அனுப்பிய முதல் படம்

உயிரினங்கள் வாழ்ந்த சாத்தியக்கூறு உள்ளதா? ஆய்வு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து ‘பெர்சிவரன்ஸ் ரோவர்’ அனுப்பிய முதல் படம் நாசா விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் வாழ்த்து நாசா, பிப்.19– செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர் ஜி.எம்.டி நேரப்படி சரியாக நேற்று (வியாழக்கிழமை) இரவு 8.55 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியது. மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது. இந்த ரோவர் செவ்வாய் […]

செய்திகள்

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் பவ்யா

வாஷிங்டன், பிப். 2– அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக பவ்யா லால் என்ற இந்திய வம்சாவளி பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பல்வேறு உயர் பதவிகளை இந்திய வம்சாவளியினர் வகித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க குடியுரிமை பெற்ற பவ்யா லால், நாசா ஊழியர்களின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் நாசா அணியில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். பொறியியல் மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்தில் […]