அன்று. மாலை கடற்கரையில் கவலை தோய்ந்த முகத்துடனும் மனம் தேய்ந்த நிலையிலும் பலத்த சிந்தனையில் கடல் அலைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தார் மகேசுவரன். வீட்டில் நடந்த நினைவலைகள் அந்தக் கடலலைகளைக் காட்டிலும் அவர் மனதில் வேகமாக அடித்தது. அன்று அவர் வீட்டில் நடந்த சம்பவங்கள் உயிர் பெற்று நிழலாடி பின்னோக்கி மனத்திரையில் ஓடத்தொடங்கியது. ” ஏங்க. நீங்க. என்னைக்கு வேலையிலிருந்து ரிட்டையர் ஆனீங்களோ அன்னியிலிருந்து வீட்டுல ஒரே பிரச்சினை தான்” என்று ஆதங்கத்துடன் கணவன் மகேசுவரனிடம் பேசினாள் மனைவி […]