சிறுகதை

பொய்மெய்! –நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

தொழிலதிபர் மாணிக்க வேல் என்றால் அந்த ஊரில் அறியாதவர்கள் யாரும் கிடையாது. ஒரு காலத்தில் சிறிய கூலித் தொழிலாளியாக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று ஒரு சிறு தொழிலதிபராக உருவெடுத்துள்ளார். வளர்ந்தவுடன் பழசை மறந்து விடும் இன்றைய உலகில் இன்னும் பழைய நண்பர்கள், ஊர், உறவு என்று எதையும் மறக்காது இருப்பவர். எவர் வந்து எந்த உதவி கேட்டாலும் தன்னால் இயலுமாயின் தயங்காது செய்து கொடுப்பவர். கல்லூரிகளை நடத்தி காசு பார்த்துக் கொண்டு கல்வித் தந்தை என்று […]

சிறுகதை

லவ் லெட்டர் – நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

அரசுடைமை ஆக்கப்பட்ட அந்த வங்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பகல் மணி பதினொன்றை கடந்துவிட்டது. வங்கிப்பணியாளர்கள் நவீன மயமாக்கப்பட்ட கணிணிகளோடு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். கேஷ் கவுண்டர் முன் நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன் நீண்டதொரு வரிசை. என் முறை வர எப்படியும் அரை மணி நேரம் ஆகிவிடும். கேஷியர் மிகக் கவனமாக இருந்தார். மெசினில் ஒரு முறைக்கு இரு முறை எண்ணினாலும் கையால் வேறு எண்ணி நோட்டை உத்துப்பார்த்து பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தார். வரிசையில் […]

சிறுகதை

மூதாட்டியின் முகம் – நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிகவேகமாக பயணித்தது நாங்கள் சென்ற ஊர்தி. உள்ளே இதமாக குளீருட்டிய ஏசி காற்று. அதே சமயம் பங்குனிமாத வெயிலில் சாலையில் கானல்நீர் காட்சிகள். இளையராசாவின் இசை காதுகளை வருட புதுச்சேரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் என்றால் நான், பாஸ்கர், சுமன், மகேஷ் ஆகிய நால்வரும்தான். இருபத்தியோராம் நூற்றாண்டின் நவநாகரீக இளைஞர்களான எங்களுடன் இளமை ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. கண்களை ரேபான் குளிர்கண்ணாடி மறைத்துக் கொண்டிருக்க வாகனத்தின் எதிரே செல்லும் இளவயது பெண்களை சைட் […]

சிறுகதை

பூமாராங்க் – நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

‘என்னம்மா! எந்த மாப்பிள்ளையைப் பெண் பார்க்க வரச் சொல்றது? தரகர் வந்து கேட்டுக்கிட்டே இருக்கார்! மகன் ரமேஷ் கேட்கவும் அந்த செங்கல்பட்டு பையனையே ஓக்கே சொல்லிடலாம்டா! என்றாள் அவனது அம்மா மீனாட்சி. தனது ஒரே தங்கைக்கு ஏற்ற வரனாக தேடிக் கொண்டிருந்தான் ரமேஷ். ஏகப்பட்ட ஜாதகங்களை சலித்து எடுத்ததில் ஒன்றிரண்டு தேறியது. அதிலும் சிலவற்றைக் கழித்தான். வேலை சரியில்லை; பையன் வயசானவனாகத் தெரிகிறான் என்று சிலவற்றைக் கழித்து இறுதியில் இரண்டு ஜாதகங்களை ஓக்கே செய்தான். ஒன்று செங்கல்பட்டு […]