கோவை, செப். 10– மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். விநாயகர் விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், புதியதாக கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. இவரும் திராவிட அரசியலை பின்பற்றுகிறார் என்று எல்.முருகன் பேசினார்.