சென்னை, அக். 22– தமிழகத்தில் இரண்டு ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கு இணையாக, ஏ.சி., இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப் பெட்டிகளுடன் கூடிய ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. நடப்பாண்டு இறுதிக்குள் நாடு முழுதும், 26 ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன. திருநெல்வேலி -– ஷாலிமர், தாம்பரம் -– சந்திரகாசி என இரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்க உள்ளன. […]